தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லியாக நடிக்க தொடங்கியவர் அஞ்சலி. இவருக்கு கண்ணம்மாவை பிடிக்கவே பிடிக்காது என்பதால் அவரைப் பல வழிகளில் பழிவாங்க முயற்சி செய்தார்.
அதன்பிறகு கண்ணம்மா பற்றி புரிந்து கொண்டு நல்லவராக மாறினார் அஞ்சலி. இப்படி நல்ல வேடத்தில் நடித்து வந்த நிலையில் திடீரென இந்த சீரியலில் இருந்து விலகிக் கொண்டுள்ளார். இதற்கான காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலில் இவர் ஆசிரியையாக நடிக்க உள்ளார். இதற்கான புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. பாவாடை தாவணியில் கண்மணி அழகாக தோற்றமளிக்கிறார்.
சீரியலின் பெயர் என்ன என்பதை ட்விஸ்ட்டோடு சீரியல் குழு அறிவித்துள்ளது.
View this post on Instagram