bharathi-kannamma-and-raja-rani-2-serial episode
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல் மெகா சங்கமாக இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது. இன்றைய எபிசோடில் பாரதி ஹேமாவுடைய அம்மா யாருன்னு எனக்கே தெரியாது அவளை ஒரு அனாதை ஆசிரமத்தில் இருந்து எடுத்து வந்து தான் வளர்த்தோம் என சொல்ல கண்ணம்மா உங்க பக்கத்து ஞாயத்தை மட்டும் சொல்லிட்டீங்க நான் என்னுடைய பக்கம் நியாயத்தை சொல்ல வேண்டாமா என சொல்ல பாரதி முதலில் கடுப்பாகி பின்னர் சரி சொல்லு அப்படி என்னதான் சொல்றேன்னு நானும் தெரிஞ்சிக்கிறேன் என கூறுகிறார்.
பிறகு கண்ணம்மா எனக்கு பிறந்தது இரட்டை குழந்தை என சொல்ல பாரதி உனக்கு பிரசவம் பார்ப்பதே நான்தான் என்கிட்ட இப்படி கலர் கலரா கலந்து விடுற என சொல்ல நேர்ல பார்த்த சாட்சி இருந்தா நீங்க நம்புவீங்களா என கேட்கிறார். பிறகு பாரதியை அழைத்து வந்து கண்ணம்மாவுக்கு பிரசவம் பார்த்த நர்ஸ் துளசியை வரவழைத்து அனைத்து உண்மைகளையும் சொல்ல வைக்கிறார். துளசி நீங்கள் பிரசவம் பார்த்து சென்ற பிறகு கண்ணம்மாவுக்கு மீண்டும் பிரசவ வலி ஏற்பட்டது அப்போது கண்ணம்மாவை தேடி வந்த சௌந்தர்யா மேடம் தான் பிரசவம் பார்த்தார்.
அதுமட்டுமல்லாமல் அவர் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என சொல்லி இரண்டு குழந்தையை ஒரு குழந்தையை தூக்கி வந்து விட்டார். கண்ணம்மாவுக்கு பல வருடங்களாக இந்த விஷயம் தெரியாது. அதன் பிறகு தான் அவள் தனக்கு பிறந்தது இரட்டை குழந்தை என்பதை தெரிந்து கொண்டால் அந்த குழந்தை தான் ஹேமா என கூறுகிறார். துளசி சொன்னதையும் நீங்க நம்ப மாட்டீங்க வேணும்னா உங்க அம்மா கிட்ட கேளுங்க. இந்த விஷயத்துல எந்த அம்மாவும் பொய் சொல்ல மாட்டாங்க உங்க அம்மாவும் அந்த அளவுக்கு கல்நெஞ்சகாரி இல்ல என கண்ணம்மா கூறுகிறார்.
பிறகு பாரதி சௌந்தர்யாவிடம் வந்து நீங்க உண்மைய சொல்லுங்க இவர் என்ன என்னமோ கதை கதையா சொல்லிக்கிட்டு இருக்கா. இத்தனை வருஷம் எங்க இருந்தாங்கன்னு தெரியாத நர்சை கூட்டிக்கொண்டு வந்து பொய் சொல்ல வைக்கரா என சொல்ல கதறி அழுத சௌந்தர்யா பாரதியின் கையை பிடித்துக் கொண்டு என்ன மன்னிச்சிடு பாரதி கண்ணம்மா சொல்ற அத்தனையும் உண்மை என நடந்த விஷயங்கள் அனைத்தையும் கூறுகிறார். இதனால் பாரதி மொத்தமாக நொறுங்கி கதறி அழுகிறார். இப்படியாக இன்றைய சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
பைசன் படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
வீட்டுக்கு ரோகினி பாம்புடன் வர விஜயா அலறி அடித்து ஓடியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
O Kadhale (Song) | Dhanush, Kriti S | AR Rahman, Adithya RK, Mashook | Aanand…