bharathi kannamma and raja rani 2 serial episode
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி மற்றும் பாரதி கண்ணம்மா. இவை இரண்டும் இணைந்து மெகா சங்கமம் என்ற பெயரில் இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது.
இன்றைய எபிசோடில் சந்தியா சாமியார் செய்த ஒவ்வொரு குற்றத்தையும் கண்டுபிடித்து அதை அனைத்தையும் ஆதாரத்தோடு நிரூபிக்க ஊர் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். மேலும் சிலையின் கண்ணீர் சிவப்பு நிறங்களுக்கு தடவி தான் கண்ணீர் வர வைக்கப்பட்டது என்பதை நிரூபிக்கிறார்.
இதனையடுத்து போலீஸ் சாமியாரை பிடிக்க சிவகாமி ஓடிச் சென்று சந்தியாவை கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்கிறார். அதன் பிறகு செல்வம் பார்வதியை துப்பாக்கி முனையில் வைத்து சாமியாரை விடுதலை செய்யுமாறு மிரட்டுகிறார். இப்படியான நிலையில் அர்ச்சனா சாதுரியமாக செயல்பட்டு செல்வத்தின் தலையில் கட்டையால் தாக்கி பார்வதியை மீட்கிறார். பிறகு போலீஸ் இதுவரையும் கைது செய்ய ஊர் மக்கள் அனைவரும் அர்ச்சனாவை பாராட்டுகின்றனர்.
பிறகு எல்லோரும் வீட்டுக்கு சென்ற பிறகு எல்லா பிரச்சனையும் ஒரேடியாக முடிந்து விட்டது என மயிலை வைத்து அனைவருக்கும் சுத்தி போடுகின்றனர். அதன் பின்னர் சிவகாமி எல்லாரும் முன்னாடியும் சந்தியாவிடம் மன்னிப்பு கேட்கிறார். சந்தியா செய்த ஒவ்வொரு விஷயத்தையும் சுட்டி காட்டி என்னை மன்னித்துவிடு நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் என கெஞ்சுகிறார். பிறகு சிவகாமியை சமாதானப்படுத்த முயற்சி செய்கின்றனர். அவசரப்பட்டு ஏற்றி வைத்திருந்த மூன்று விளக்கு ஒரு விளக்கை அணைத்து விட்டேன் என சிவகாமி நினைத்து அப்படியே நெஞ்சில் கை வைத்து மயங்கி விழுகிறார்.
பிறகு அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ய அவருக்கு மைல்ட் ஹார்ட் அட்டாக் என தெரிய வருகிறது. அவருக்கு வருங்காலத்தில் பிரச்சனை ஏதும் ஏற்படாமல் இருக்க ஒரு சிறிய ஆபரேஷன் செய்ய வேண்டும் அதற்காக அவரை சென்னைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என பாரதி கூற அதற்கான ஏற்பாடுகளையும் நான் செய்கிறேன் என செய்கிறார்.
இந்த பக்கம் வெண்பா செய்தியில் கண்ணம்மா சாதனை குறித்து கேட்டு கடுப்பாக அவரை மேலும் வெறுப்பேத்துகிறார் ரோகித். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி மெகா சங்கமம் எபிசோட் முடிவடைகிறது.
O Kadhale (Song) | Dhanush, Kriti S | AR Rahman, Adithya RK, Mashook | Aanand…
பனைப் பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவதை மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
பரதநாட்டியத்தின் ஆழத்தைக் கொண்டாடும் ‘ப்ரோவோக் கலை விழா 2025’ – சென்னையில் நவம்பர் 1, 2 தேதிகளில்! சென்னையின் கலாசார…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிடம்…