Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சாமியார் போட்ட திட்டம்… அர்ச்சனாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. ராஜா ராணி 2 பாரதிகண்ணம்மா எபிசோட்

bharathi kannamma and raja rani 2 serial episode

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் ராஜா ராணி மற்றும் பாரதி கண்ணம்மா. இரண்டும் மெகா சங்கமம் என்ற பெயரில் இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இன்றைய எபிசோடில் சந்தியா வருக்கப்பட்டுக் கொண்டிருக்க அப்போது வந்த கண்ணம்மா அவரை சமாதானப்படுத்தி பிறகு குழந்தைகள் குளிக்க வெண்ணீர் வேண்டும் என கேட்க மயிலை வெண்ணீர் போட சொல்கிறார். மயிலு காஸ் சிலிண்டர் தீர்ந்துவிட்டது என சொன்னேன் சரி அடுப்பில் சுடு தண்ணீர் போட்டுக் கொள்ளலாம் என கண்ணம்மா ஐடியா கொடுக்க சந்தியா சென்று அர்ச்சனா தட்டி வைத்திருந்த வறட்டிகளை எடுத்து வருகிறார்.

வரட்டிகளுக்குள் நகை இருப்பதை கண்டுபிடித்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதெல்லாம் கண்டிப்பா அர்ச்சனா செய்து வேலையாக தான் இருக்கும் என சந்தியா முடிவு செய்கிறார். ஆனால் இதை அர்ச்சனாவிடம் காட்டிக் கொள்ளாமல் வறட்டு எல்லாம் எரிந்து சாம்பல் ஆகிவிட்டது என சொல்லலாம் என முடிவெடுக்கின்றனர்.

பிறகு பாரதியும் கண்ணம்மாவும் சிவகாமியை சென்று சந்தித்து சமாதானம் செய்ய முயற்சி செய்ய சமாதானம் ஆகாத சிவகாமி மாறவேண்டியது சந்தியாவும் சரவணன் தான் அவர்களிடம் போய் பேசுங்கள் என கூறுகிறார். பிறகு வெளியில் வந்த அர்ச்சனா வரட்டுகள் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்து மயிலை கூப்பிட்டு இங்கிருந்த வரட்டிகள் எங்கே என கேட்க அதை எரிச்சிட்டோம் என கூறுகிறார்.பிறகு அர்ச்சனா உட்கார்ந்து எல்லாம் தெரிஞ்சு சாம்பலா போச்சு என புலம்ப அந்த நேரத்தில் வந்த செந்தில் என்ன அர்ச்சனா என்கிட்ட இந்த விஷயத்தை சொல்லாம மறைச்சுட்ட.. என சொல்ல வர்த்தனா நகை பற்றி தான் கேட்கிறார் என நினைத்துக் கொண்டிருக்க கடைசி செந்தில் உனக்கு ஏதாச்சு சாப்பிடனும் போல சொல்லியிருந்தால் நான் ஏதாவது தோப்பு குள்ள போய் கூட மாங்காவ எடுத்து வந்து கொடுத்திருப்பேன் என கூறுகிறார்.

பிறகு சௌந்தர்யா குடும்பத்தார் மளிகை சாமான்களை வாங்கிக் கொண்டு சிவகாமி வீட்டிற்கு வந்து அவரை சந்தித்து பேசி ஆறுதல் கூறுகின்றனர். கண்ணம்மா இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவார் அவளை நீங்க நிச்சயமா நம்பலாம் என கூறுகிறார்.

பார்வதி சோகமாக இருக்க அவருக்கு அவருடைய தோழி போன் செய்து சாமியாரை எனக்கு ரொம்ப நல்லா தெரியும் நான் அவருடைய தீவிர பக்தை. நான் உன்னை சாமியார் கிட்ட கூட்டிட்டு போறேன் நீ அவர்கிட்ட பேசி மன்னிப்பு கேள் கண்டிப்பாக மன்னிப்பாரு என சொல்கிறார். பார்வதியும் சரி என சாமியார் மடத்திற்கு செல்ல சாமியார் பார்வதியிடம் தவறாக நடக்க முயற்சி செய்கிறார். இதனால் பார்வதி சாமியாரை பளார் என அறைகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி மற்றும் பாரதி கண்ணம்மா மெகா சங்கம் எபிசோட் முடிவடைகிறது.

bharathi kannamma and raja rani 2 serial episode
bharathi kannamma and raja rani 2 serial episode