Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அர்ச்சனா மேல் சந்தேகப்பட்ட செந்தில்.. புலம்பி அழுத சிவகாமி.. ராஜா ராணி 2 மற்றும் பாரதிகண்ணம்மா இன்றைய எபிசோடு

bharathi kannamma and raja rani 2 serial episode

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களான ராஜா ராணி மற்றும் பாரதி கண்ணம்மா என இரண்டு சீரியல்கள் மெகா சங்கமம் என்ற பெயரில் இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இன்றைய எபிசோடில் நகை திருடிய அர்ச்சனா அதை சாணிக்குள் மறைத்து வெரட்டியாக தட்டி வைக்கிறாள். பிறகு வீட்டுக்குள் எல்லாரும் நகையை எங்கேயும் காணவில்லை என சொல்லிக் கொண்டிருக்க அர்ச்சனா நின்று கொண்டிருப்பதை பார்த்து செந்திலுக்கு சந்தேகம் வருகிறது.

பிறகு கண்ணம்மா சாப்பிடலாமா என கேட்க சமைக்கவே மறந்துட்டேன் என சந்தியா சொல்ல நான் சமைத்து விட்டேன் என சொல்லி எல்லோரையும் சாப்பிட அழைக்கிறார். பிறகு சௌந்தர்யா போன் போட்டு நடந்த விஷயத்தை விசாரிக்க கண்ணம்மா எல்லாத்தையும் நாங்க பார்த்துக்கிறோம். அவர் எனக்கு உறுதுணையாக இருக்காரு என கூறுகிறார்.

ரூமுக்குள் சிவகாமி அழுது புலம்புவதை பார்த்த சரவணன் இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும் அம்மாவை இப்படி பார்க்க முடியவில்லை எனக் கூறுகிறார். சந்தியா நகை வீட்டுக்குள்ள தான் இருக்கிறது என சொல்வது கேட்டு அர்ச்சனா பதற்றம் அடைகிறாள்.

பிறகு இரவு நேரத்தில் பாரதி மற்றும் கண்ணம்மா என இருவரும் மனம் விட்டு பேசி சிரிக்கின்றனர். மறுநாள் காலையில் பால்காரன் பால் தர மறுக்கிறார். இதை மயிலு வீட்டில் உள்ளவர்களிடம் சொல்ல எல்லோரும் அதிர்ச்சியாக இருக்க அந்த நேரத்தில் சரவணன் அப்பா மளிகை கடைக்காரன் பொருட்களை தர மறுக்கிறான் என வீட்டுக்கு வருகிறார். செந்தில் கடைக்கு யாரும் வரவில்லை கடையை காலி பண்ண சொல்கிறார்கள் என கூறுகிறார். பார்வதி அவரது மாமியார் அழைத்து வந்து வீட்டில் விட்டு செல்கிறார்.

இதுக்கு எல்லாத்துக்கும் காரணம் சந்தியா தான் முதலில் இந்த கேட்டு வாபஸ் வாங்கினால் எல்லாம் சரியாகிவிடும் என சிவகாசி சொல்ல சரவணன் கேஸை வாபஸ் வாங்க முடியாது என கூறுகிறார். இதனால் இனி உனக்கும் எனக்கும் இருந்த அம்மா மகன் உறவு முடிந்து போச்சு. நான் செத்தா கூட நீ என்ன பார்க்க வரக்கூடாது எனக்கு கொல்லி போடக்கூடாது, செந்தில் அதை செய்தால் போதும் என கூறுகிறார்.

இந்த பிரச்சனைகளுக்கு பிறகு அர்ச்சனா வெளியில் வந்து ஒரு கோடி ஒரு கோடி என அவர் தட்டிய வரட்டிகளுக்கு காவல் காக்கிறார். இந்த நேரத்தில் செந்தில் வெளியே வந்து அர்ச்சனாவை திட்டி வீட்டுக்குள் அனுப்புகிறார். நைட்ல இருந்து இவ நடவடிக்கையை சரியில்லையே என சந்தேகப்படுகிறார் செந்தில். இத்துடன் இன்றைய ராஜா ராணி மற்றும் பாரதி கண்ணம்மா மெகா சங்கமம் எபிசோட் முடிவடைகிறது.

bharathi kannamma and raja rani 2 serial episode
bharathi kannamma and raja rani 2 serial episode