Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சந்தியாவை திட்டிய சிவகாமி.. சந்தியாவிற்கு போன் போட்ட பாரதி கண்ணம்மா.. இன்றைய ராஜா ராணி 2 பாரதி கண்ணம்மா எபிசோட்

bharathi kannamma and raja rani 2 serial episode
bharathi kannamma and raja rani 2 serial episode
bharathi kannamma and raja rani 2 serial episode

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2. இந்த இரண்டு சீரியல்களும் மெகா சங்கமம் என்ற பெயரில் இணைந்து ஒளிபரப்பாகி வருகின்றன. இன்றைய எபிசோடில் பாரதி கண்ணம்மா சந்தியா சரவணன் என நால்வரும் சாமியாரை சந்தித்து பேசும்போது சாமியார் நகையை திருடியது நீங்க தான். அந்த நகை உங்களிடம் தான் இருக்கிறது அதை என்னிடம் கொடுத்து மன்னிப்பு கேட்டுவிட்டு கேசை வாபஸ் வாங்கும் வழியை பாருங்கள் என சொல்ல அனைவரும் எங்களிடம் நகை இல்லை எனக் கூற சாமியார் மிகவும் திமிராக பேசுகிறார்.

பிறகு சரி பார்த்துக் கொள்ளலாம் என பாரதியின் கண்ணம்மாவும் ஹோட்டலுக்கு கிளம்புகின்றனர். சந்தியா சரவணன் அவர்களை வீட்டுக்கு அழைத்தும் இருவரும் நாங்க ஹோட்டலில் தாங்கிக் கொள்கிறோம் நாளைக்கு வீட்டிற்கு வருகிறோம் என சொல்லி விடுகின்றனர். இந்த பக்கம் வெண்பா தொலைக்காட்சி சேனலில் செய்தியில் கண்ணம்மா தென்காசியில் சந்தியா குடும்பத்தோடு சேர்ந்து நகை திருடியதாக செய்தி வெளியாக இதைப் பார்த்த வெண்பா சந்தோஷப்பட்டு ரோஹித்தை கூப்பிட்டு இந்த விஷயத்தை கூறுகிறார்.

அதன் பிறகு ரோகித் கண்ணம்மா அக்கா மட்டும் தனியா போல கூட பாரதி மாமாவும் போயிருக்காரு ரெண்டு குழந்தைகளும் போயிருக்காங்க கிட்டத்தட்ட ஒரு ஹனிமூன் போயிருக்காங்க என சொல்லி வெண்பாவை வெறுப்பேத்துகிறார். இந்த பக்கம் சிவகாமி என்ன போய் திருடின்னு சொல்லிட்டாங்களே ஊரு சிவகாமி அம்மா மரியாதையா கூப்பிட்டு இருந்தவர்கள் எல்லாம் இப்போ ஏய் சிவகாமி என கூப்பிடறாங்க.

சந்தியா சரவணன் அவர் மேல கேஸ் கொடுத்ததற்காக அவர் பழிவாங்க தான் இப்படி பண்றாரு என சொல்ல சிவகாமி எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம். நீதி நேர்மை பேசி இப்படி இந்த சாமி கண்ணுலயே கண்ணீர் வர வச்சிட்டீங்க. அந்த சாமியோட கோபத்துக்கு ஆளாகிவிடும் அதனாலதான் நம்ம குடும்பம் இப்படி கஷ்டப்படுது என சொல்ல அர்ச்சனா உட்பட ஆளாளுக்கு சந்தியாவை குத்தம் சொல்கின்றனர். பிறகு என்ன கொஞ்சம் தனியா விடுங்க என சிவகாமி ரூமுக்கு சென்று விடுகிறார். பிறகு சந்தியா அழுது கொண்டே ரூமுக்கு சென்று விடுகிறார்.

இந்தப் பக்கம் பாரதியின் கண்ணம்மாவும் ஹோட்டலில் சென்று ரூம் கேட்க ரூம் எதுவும் இல்லை என கூறுகின்றனர். ஆல்ரெடி ரூம் புக் பண்ணி இருக்கேன் என சொல்ல எதுவும் புக் ஆகவில்லை என கூறுகின்றனர். அடுத்து இரண்டு மூன்று ஹோட்டலுக்கு சென்று ரூமை கேக்கும் யாரும் தர முன் வரவில்லை. எல்லோரும் சாமியார் பக்தர்கள் என்பதால் பெரும் தர முன் வரவில்லை என்பதை பாரதி புரிந்து கொள்கிறார்.

பிறகு கண்ணம்மா சந்தியா வீட்டுக்கு போயிடலாம் குழந்தைகளை வைத்துக்கொண்டு எங்கே போய் நிற்கிறது என சொல்ல குழந்தைகளின் அதையே சொல்ல சரியென பாரதி கண்ணம்மா சந்தியாவுக்கு போன் போடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.