bharathi kannamma 2 serial today episode update 03-04-23
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் கண்ணம்மா, சாந்தி தன்னுடைய அம்மாவை ஷோபாவில் உட்கார வைத்து இருக்க அப்போது அங்கு வரும் சண்முக வாத்தியார் கண்ணம்மாவிடம் தனியாக பேச வேண்டும் என அழைத்துச் சென்று பாரதிய பத்தி என்ன நினைக்கிற? உனக்கும் பாரதிக்கும் உறவு எப்படி என கேட்க கண்ணம்மா அவன் எனக்கு நல்ல பிரண்டு என சொல்ல நல்ல பிரண்டா மட்டும் இருங்க என சண்முக வாத்தியார் அறிவுரை வழங்குகிறார்.
அதன் பிறகு வெண்பா வீட்டில் பாரதி இந்த கல்யாணம் வேண்டாம் என சொல்லியதால் சந்தோஷமாக இருக்க அப்போது பாரதி கீழே வர வெண்பா நான் சொன்னதுக்காக இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னதுக்கு தேங்க்ஸ் என்ன சொல்ல நீ சொன்னதுக்காக இந்த கல்யாணம் வேண்டாம் என நான் முடிவு எடுக்கல, அதுக்கு பின்னாடி ஒரு காரணம் இருக்கு என சொல்லி ஷாக் கொடுக்கிறார்.
அடுத்ததாக கண்ணம்மா ரூமில் தூங்கிக் கொண்டிருக்க சண்முக வாத்தியார் ரூமுக்குள் வந்து டார்ச் லைட்டை தேட இந்த நேரத்தில் கண்விழிக்கும் கண்ணம்மா சிறு வயதில் தன்னிடம் ஒருவர் தவறாக நெருங்கி வந்ததை நினைத்து சத்தம் போடுகிறார். உடனே சண்முக வாத்தியார் நான்தாம்மா அப்பா என அருகே வர கிட்ட வராதீங்க என அலறுகிறார்.
பிறகு வெண்பா தன்னுடைய அண்ணன் விஜயிடம் பாரதிக்கு கண்ணம்மா மேல ஏதோ காதல் வந்திருச்சுன்னு நினைக்கிறேன், நீ அவன்கிட்ட பேசி உண்மையை வெளியே கொண்டு வா என்று சொல்ல விஜய் பாரதியிடம் பேச அப்போது பாரதி கண்ணம்மா மேல இருந்த வெறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது என சொல்கிறார். இதை மறைந்திருந்து கேட்ட வெண்பா இதை இப்படியே விடக்கூடாது இதுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என திட்டம் போடுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
தாய்மை என்பது வரம் என்று சமந்தா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி…
மதராசி படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
சிம்பு 49 படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
சங்குப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…