bharathi kannamma 2 serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் பாரதி கண்ணம்மா சீசன் 2. இன்றைய எபிசோடில் ஜெயிலில் இருந்து விடுதலையாகும் சித்ராவுக்கு இதுவரை அவள் சம்பாதித்த பணத்தை கொடுத்து வெளியே சென்று இந்த சிறை வாழ்க்கையை முழுவதுமாக மறந்து விட்டு உனக்காக புத்தம் புதிய வாழ்க்கையை தொடங்கி வாழ வேண்டும். நீ நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என ஜெயிலர் மேடம் சொல்லி அனுப்புகிறார்.
மறுபக்கம் சௌந்தர்யா தன்னுடைய மகன் பாரதிக்கு மேட்ரிமோனியில் வரன்களை பார்க்க ஒரு பெண்ணின் புகைப்படத்தை பார்த்து இந்த பெண் பாரதிக்கு நிச்சயம் ஏற்றவளாக இருப்பாள் நாளைக்கு போய் பெண் பார்க்கலாம் என சொல்ல அவருடைய அண்ணனும் அதற்கான ஏற்பாடுகள் செய்வதாக சொல்ல அண்ணி ஷர்மிளா தன்னுடைய மகள் வெண்பாவை பாரதிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என திட்டம் போடுகிறார்.
பிறகு மது காபி எடுத்து வர ஷர்மிளா அதை பார்க்காமல் நேராக போய் மது மீது மோதி காபி மேலை கொட்டி விட ஷர்மிளா மதுவை திட்டி கன்னத்தில் அறைய சௌந்தர்யா ஷர்மிளாவை திட்டி அவளுடைய வாழ்க்கை பற்றி பேசி மதுவிடம் மன்னிப்பு கேட்க வைக்கிறார்.
அதன் பிறகு ஷர்மிளா மதுவிடம் மன்னிப்பு கேட்க வைத்த உன்னை சும்மா விடமாட்டேன் என் பொண்ணு பாரதிக்கு கல்யாணம் பண்ணி வச்சி இந்த சொத்து முழுக்கவும் என்னோட கண்ட்ரோலுக்குள்ள கொண்டு வருவேன் என மனதுக்குள் சபதம் எடுக்கிறார்.
மறுபக்கம் சித்ரா தன்னுடைய தாய் மாமன் வீட்டுக்கு வர அங்கு மாமா அத்தை என எல்லோரும் அவளை அசிங்கப்படுத்தி வீட்டை விட்டு வெளியே அனுப்புகின்றனர். இதனால் போக இடம் இல்லாமல் கண்ணீருடன் அங்கிருந்து நகர்கிறார் சித்ரா. இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan
Magale Music Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…