bharathi-kannamma-2 serial episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாரதி டாக்டர் ஒருவரை அனுப்பி வைக்க அவர் கண்ணம்மாவின் அம்மாவை பரிசோதனை செய்து கூடிய விரைவில் குணப்படுத்திவிடலாம். நான் சொல்லும் மருந்துகளையும் உணவு முறையும் பின்பற்ற வேண்டும் என சொல்ல கண்ணம்மா கண்டிப்பா நீங்க சொல்றத அப்படியே பின்பற்றுகிறோம் என சொல்கிறார்.
அதன் பிறகு சௌந்தர்யாவின் அண்ணா சௌந்தர்யாவிடம் பாரதிக்கு ஒரு பெண் பார்த்து இருப்பதாக சொல்ல அங்கு வரும் ஷர்மிளா எதுக்கு வேற எங்கையோ பொண்ணு பார்க்கணும்? வெண்பா ஃபாரின் போய் படிச்சு முடிச்சுட்டு வந்திருக்கா அவளை பாரதிக்கு கல்யாணம் பண்ணி வச்சா அவ பாரதியும் மாத்துவா இந்த பிசினஸ் எல்லாத்தையும் பாத்துக்குவார் என சொல்ல சௌந்தர்யா அதெல்லாம் சரி வராது என கூறுகிறார்.
இருந்தாலும் சர்மிளா சின்னஞ்சிறுசுங்க அப்படித்தான் இருப்பாங்க பெரியவங்க நாம பார்த்து கல்யாணம் பண்ணி வச்சா அதுக்கப்புறம் எல்லாம் சரியாகிவிடும் என சொல்ல இந்த நேரத்தில் பாரதி வர மது கல்யாண விஷயம் பேசுவதை சொல்கிறார். அதேபோல் மறுபக்கம் விஜய் வெண்பாவிடம் கல்யாண விஷயம் பேசுவதை சொல்ல வெண்பாவும் அங்கு வந்து விடுகிறார்.
உள்ளே வந்த பாரதி அத்தை நான் என்னைக்காவது வெண்பாவை எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேட்டேனா? அவளுடைய கல்ச்சர் வேற என்னுடைய கல்ச்சர் வேற அவளுடைய குணம் வேற என்னுடைய குணம் வேற எனக்கும் அவளுக்கும் எப்போதும் செட் ஆகாது என்னுடைய பார்வையில் எனக்கேத்த பொண்ணு அவ கிடையாது, இந்த பேச்சை இதோட விட்டுடுங்க என சொல்ல ஷர்மிளா ஷாக் ஆகிறார். அதன் பிறகு சௌந்தர்யாவும் இதுக்கு மேல என்ன பண்றது என சொல்லி கிளம்பி செல்கிறார்.
அடுத்து மது கண்ணம்மாவின் வீட்டுக்கு வந்து நடந்த விஷயங்களை சொல்ல கண்ணம்மாவும் பாரதிக்கு ஏத்த பெண் வெண்பா இல்லை என கூறுகிறார். நீதான் பாரதிக்கு ஏத்த பெண் என மது மறைமுகமாக சொல்ல கண்ணம்மா என்ன சொன்ன என கேட்க மது சமாளித்து விடுகிறார். அடுத்து மது அங்கிருந்து கிளம்புகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் என்னை வேணாம்னு பாரதி ரிஜெக்ட் பண்ணிட்டான், இப்போ சொல்றேன் அவன் தான் என்னுடைய புருஷன். அவன கல்யாணம் பண்ணி அவனை பொட்டிப் பாம்பா அடக்கி என் சொல் பேச்சை கேட்க வைக்கிறேன். இந்த குடும்பத்தை கட்டி ஆள்கிறேன் என சொல்கிறார்.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…