Tamilstar
Health

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு சாப்பிட வேண்டிய காய்கறிகள்..!

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு சாப்பிட வேண்டிய காய்கறிகள் குறித்து பார்க்கலாம்.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக எலும்புகளின் ஆரோக்கியத்தினால் அதிக கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். ஆரோக்கியமான எலும்புகளை வைத்துக்கொள்ள சில காய்கறிகளை சேர்க்கலாம். என்னென்ன காய்கறிகள் சாப்பிடலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பசலைக் கீரையில் கால்சியம் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் அது எலும்புகளை பலப்படுத்த உதவும்.

குறிப்பாக வெந்தயம் உணவில் சேர்க்கும்போது மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த ப்ரோக்கோலியை உணவில் சேர்க்க வேண்டும். இந்த மூன்றும் உணவில் சேர்த்து சாப்பிடும் போது பலவீனமாக இருக்கும் எலும்புகளை பலப்படுத்தி உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டோம்.

எனவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்..