முள்ளங்கி சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளில் முக்கியமான ஒன்று முள்ளங்கி. இது உணவில் சுவையை கூட்டுவது மட்டுமில்லாமல் உடலுக்கும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது.
இதில் பொட்டாசியம் நிறைந்து இருப்பதால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.இது மட்டும் இல்லாமல் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதனை எடுத்துக் கொள்வது நல்லது.
உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ளவும் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபடவும் முள்ளங்கி பயன்படுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கிய மருத்துவ குணங்கள் நிறைந்த முள்ளங்கியை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்