அனைவரும் விரும்பி குடிக்கும் பானங்களில் முக்கியமான ஒன்று லஸ்ஸி. இது உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவும். இது மட்டும் இல்லாமல் ரத்த அழுத்தம் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு ரத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.
குறிப்பாக வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்வது மட்டுமில்லாமல் செரிமான பிரச்சினையில் இருந்து விடுபடவும் உதவும்.
மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் லஸ்ஸி குடிப்பதன் மூலம் உடல் எடை குறைய வாய்ப்பு உள்ளது. உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது