Tamilstar
Health

கிராம்பு டீ யில் இருக்கும் நன்மைகள்..!

benifits of clove tea

கிராம்பு டீ யில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

அன்றாடம் சமைக்க பயன்படுத்தும் வாசனை பொருட்களில் முக்கியமான ஒன்று கிராம்பு. இது உணவில் சுவையைக் கூட்டுவது மட்டுமில்லாமல் இந்த டீ குடிக்கும் போது அது உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

கிராம்பில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் இது செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்து விடுபடவும் மலச்சிக்கல் பிரச்சனையில் அவதிப்படுபவர்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

இது மட்டும் இல்லாமல் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி அல்சர் பாதிப்பிலிருந்து குறைக்க உதவுகிறது. மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கட்டுப்படுத்துவதற்கும் புற்றுநோய் செல்களை அழிக்கவும் பயன்படுகிறது.

எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணமும் நிறைந்த கிராம்பு தேநீரை குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.