துளசி பால் குடிப்பதனால் மன அழுத்தத்தை குறைத்து ஆரோக்கியமாக இருப்பதை உணரலாம்.
பொதுவாகவே பால் குடிப்பது நம் அனைவருக்கும் ஆரோக்கியம் கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே ஆனால் துளசி பால் குடிப்பதன் மூலம் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகரித்து பல நன்மைகளை நமக்கு கொடுக்கிறது. பால் எவ்வளவு முக்கியமோ அதேபோல் தான் துளசி. இது மருத்துவ குணம் நிறைந்த மூலிகையாகவே கருதப்படுகிறது.
இதனை பாலுடன் ஓட்டு கொதிக்க வைத்து குடித்தால் பல நோய்களிலிருந்து நம்மை விடுவிக்கும்.
ஆஸ்துமா நோயாளிகளுக்கு துளசி இலையை பாலில் கொதிக்க வைத்து கொடுத்தால் மிகுந்த நன்மை அளிக்கும். மேலும் ஒற்றைத் தலைவலி பிரச்சனை உள்ளவர்கள் இந்தப் பாலை தொடர்ந்து குடிப்பதன் மூலம் சிறந்த பலன் கிடைக்கும்.
இது மட்டும் இல்லாமல் இன்றைய காலகட்டத்தில் அனைவரும் பரபரப்பான வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் மேலும் கல்விக்கடன் காதல் தோல்வி அலுவலகப் பணி குடும்பப் பிரச்சனை போன்ற பல்வேறு மன அழுத்தங்களால் பாதிக்கப்படுகின்றனர் அப்படி இருப்பவர்கள் இந்த பாலை சாப்பிடும்போது மனம் அழுத்தத்தை நீக்கி பதற்றத்தில் இருந்து நம்மை காக்கும்.
சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் இந்தப் பாலை குடித்து வந்தால் சிறுநீரக கல் மற்றும் சிறுநீரக வலி பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.
பல நோய்களுக்கு மருந்தாகும் துளசி பாலை குடித்து நலமாக வாழ்வோம்.