Tamilstar
Health

ஆப்பிள் சாப்பிடுவதில் இருக்கும் நன்மைகள்..!

benifits of apple

ஆப்பிள் சாப்பிடுவதில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

பொதுவாகவே அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று ஆப்பிள். இது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது என அனைவருக்கும் தெரியும். ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் அது நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கிறது.

ஒரு நாளைக்கு இரண்டு ஆப்பிள்கள் சாப்பிடுவதனால் நம் உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. ஆப்பிள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.

ஒரு நாளைக்கு ஐந்து ஆப்பிள் சாப்பிடுவதன் மூலம் எலும்புகளுக்கு வலுவை கொடுக்கிறது. ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. மேலும் இது மூளை செல்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

எனவே ஆப்பிளில் இருக்கும் ஆரோக்கிய பலனை அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.