பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை போன்ற உணவுப் பொருட்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். அதிலும் குறிப்பாக பிஸ்தா உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. பிஸ்தாவில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. அதனைக் குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க பிஸ்தா பயன்படுகிறது.
இது மட்டும் இல்லாமல் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் ரத்தநாளங்களின் ஆரோக்கியத்திற்கும் கண் ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.
குறிப்பாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பிஸ்தா சாப்பிடலாம்.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த பிஸ்தா சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

