முருங்கையின் அற்புதப் பயன்கள் குறித்து பார்க்கலாம்.
பொதுவாகவே முருங்கை மரத்தில் இருக்கும் காய், பூ, இலை என அனைத்துமே உடலுக்கு மிகவும் நல்லது. அதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
முருங்கைக்கீரை சாப்பிடுவதால் மூட்டு வலி மற்றும் கீழ் வாதம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவும். இது மட்டும் இல்லாமல் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளதால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் முருங்கையின் வேர் நரம்பு தளர்ச்சிக்கு மருந்தாக இருக்கிறது. முருங்கைக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வரும்பொழுது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் இதை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த முருங்கையின் அவசியங்களை அறிந்து உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Watcha Udadha Video Song | Parimala and Co | Sandy | Sanjana | Ananthika |…
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘சேயோன்’ அடுத்த வாரம் படப்பிடிப்பை தொடங்குகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து…
ரூ.2000 கோடி வசூலை நெருங்கி சாதனை படைத்து வரும் ‘துரந்தர் 2’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
75 நாட்களை கடந்து வெற்றிநடை போடும் ‘தாய் கிழவி’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ராதிகா…
“அவர் அரசியலுக்கு வந்தபோது பலரும் நம்பவில்லை… இன்று அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர்” என்று இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, முதல்வர் விஜயை…
கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான திலீப் ராஜ், தனது 47வது வயதில் மாரடைப்பால் திடீரென காலமானார். அதிகாலை நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத்…