Bengali Film Director Tarun Majumdar Passes Away
பிரபல வங்காள மொழி இயக்குனர் தருண் மஜூம்தார். இவர் இயக்கத்தில் வெளியான கஞ்சேர் சுவர்கோ, நிமந்த்ரன், ஞானதேவத, ஆரன்ய அமர ஆகிய படங்களுக்காக 4 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். ‘பலிகா பது’, ‘குஹேலி’, ‘ஸ்ரீமர் பிருத்விராஜ்’, ‘தாதர் கீர்த்தி’ உள்ளிட்ட முக்கியமான பல படங்களை இயக்கியுள்ளார். நடுத்தரக் குடும்பங்களின் வாழ்க்கையை அழுத்தமான கதையம்சங்கள் மூலம் திரையில் கொண்டு வந்தவர் தருண் மஜூம்தார். திரையுலக சாதனைக்காக 1990-ல் பத்மஸ்ரீ விருதும் பெற்றார். இவரின் இயக்கத்தில் 2018-ல் கடைசியாக அதிகார் என்ற ஆவண படம் வெளியானது.
தருண் மஜூம்தாருக்கு சில தினங்களுக்கு முன்பு முதுமை காரணமாக உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு சிறுநீரக பாதிப்பும், இதய நோயும் இருப்பது தெரிய வந்தது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்து வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலன் இன்றி தருண் மஜூம்தார் மரணம் அடைந்தார். 92 வயதாகும் தருண் மஜூம்தார் மறைவுக்கு நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…
வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…
கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…
டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…