.
வாழைப்பழத் தோலில் நமக்கு என்னென்ன நன்மைகள் இருக்கும் என பார்க்கலாம்.
பொதுவாகவே அனைவரும் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்று வாழைப்பழம். ஏனெனில் இதற்கு முக்கிய காரணம் இதன் சுவை. மேலும் இது உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. ஆனால் நாம் சாப்பிட்டுவிட்டு தூக்கி எறியும் தோலில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருப்பதை நாம் தெரிந்து கொள்வோம்.
முதலில் மனநிலையை சீராக வைத்துக் கொள்ள வாழைப்பழத் தோல் மிகவும் உதவுகிறது ஏனெனில் அதில் செரோடோனின் ஹார்மோன் அதிக அளவில் இருப்பதால் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டால் உடலை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளவும் நல்ல தூக்கத்திற்கும் வழி வகுக்கும்.
மேலும் வாழைப்பழத்தில் அதிகமாக நார்ச்சத்து இருப்பது அனைவரும் அறிந்ததே ஆனால் வாழைப்பழத் தோலில் அதைவிட அதிகமாக நார்ச்சத்து உள்ளது. இது வயிற்றை சுத்தப்படுத்தி செரிமான பிரச்சனையிலிருந்து தடுக்கிறது.
இது மட்டும் இல்லாமல் வாழைப்பழத் தோலில் அதிகமான ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் இருப்பதால் முகப்பரு நீங்கும். மேலும் முகம் பொலிவாக இருக்கும்.
வாழைப்பழத் தோல் ரத்த அணுக்களின் சிதைவை கட்டுப்படுத்தி அவற்றை வலுப்படுத்துகிறது இதில் பச்சை வாழைப்பழ தோல் சாப்பிடுவது இன்னும் சிறந்தது.
மேலும் வாழைப்பழத் தோலில் லுடீன் இருப்பதால் கண் பார்வையை பலப்படுத்த உதவுகிறது.
இப்படி நாம் தூக்கி எறியும் வாழைப்பழத் தோலில் இருக்கும் எக்கச்சக்க நன்மைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

