Tamilstar
Health

முளைகட்டிய கோதுமை தோசை இருக்கும் நன்மைகள்..!

Benefits of Sprouted Wheat Dosa..!

முளைகட்டிய கோதுமை தோசை இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவது உடல் பருமன். உடல் பருமனை குறைக்க பல்வேறு டயட்களும் உடற்பயிற்சிகளும் செய்வது வழக்கம். அப்படி முளைகட்டிய கோதுமை தோசை சாப்பிட்டால் உடல் எடையை குறைக்க இயலும். அதைக் குறித்து பார்க்கலாம். ஆனால் பெரும்பாலானோர் கோதுமை தோசை மற்றும் சப்பாத்தி செய்து சாப்பிடுவது வழக்கம்.

முளை கட்டிய கோதுமை தயாரிக்க முதலில் கோதுமையை இரண்டு முறை கழுவி இரவில் ஊற வைத்து மறுநாள் காலையில் தண்ணீரை வடிகட்டி ஒரு காட்டன் துணியில் கட்டி வைத்து எட்டு மணி நேரம் கழித்து எடுத்தால் அதில் முளை வந்து இருக்கும். அதனை மாவாக அரைத்து தேவையான போது தோசை செய்து சாப்பிடலாம்.

குறிப்பாக இது உடல் எடை குறைய முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விலகவும் உதவும். மேலும் இதில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது.

இது மட்டும் இல்லாமல் இதில் இருக்கும் கால்சியம் எலும்புகளுக்கு ஆரோக்கியத்தை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.