Categories: Health

பேரீச்சம்பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிடுவதால் என்ன பயன்கள்?

சில உணவு வகைகளை மற்றொரு உணவுடன் சேர்த்து உண்டால் அது பல அற்புத நன்மைகளை நமக்குத் தரும் என்பது எல்லோரும் அறிந்ததே.

பசும் பாலுடன், பேரீச்சம் பழத்தை சேர்த்து உட்கொண்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

இரும்புச் சத்து பேரிச்சையில் உள்ள முக்கிய ஊட்டச்சத்து ஆகும். இரும்புச் சத்து இரத்த சிவப்பணுக்களில் உள்ள புரதமான ஹீமோகுளோபினின் உற்பத்திக்கு இன்றியமையாதது. இரத்த சோகை தொடர்புடைய பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கவும் பேரிச்சை உதவுகிறது.

பசும் பாலில் ஊறவைத்த பேரிச்சம் பழத்தை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொண்டால், அது அவர்களுக்கு மட்டுமின்றி, கருவில் வளரும் குழந்தைக்கும் ஏராளமான சுகாதார நன்மைகளை ஊக்குவிக்கின்றன.

பேரிச்சம் பழம் மற்றும் பால் கலவையை தவறாமல் உட்கொள்வது கருவில் உள்ள குழந்தைக்கு உறுதியான எலும்புகள் மற்றும் அதிக அளவிலான ரத்தத்தை உருவாக்க வலி வகை செய்யும் என்று இது குறித்த ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

பாலில் ஊறவைத்த பேரிச்சம் பழம் சருமத்திற்கு சிறந்தது. முக சுருக்கத்தை நீக்க விரும்புவோர் உலர்ந்த பேரிச்சம் பழத்தை சாப்பிடக் கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில், இது நேரெதிராக வேலை செய்யும். பாலில் ஊற வைத்த பேரிச்சையுடன் தேன் கலந்து, அதனை அரைத்து பேஸ்ட் போல் தயாரித்துக் கொள்ளவும். அந்த பேஸ்டை முகத்தில் பேக் போல இட்டுக் கொண்டு பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை அப்படியே விடவும்.

வாரத்திற்கு ஒரு முறை இந்த பேஸ்பேக் செய்து போட்டுக் கொண்டால் முக சுருக்கம் நீங்கி இளமையாக காட்சியளிப்பீர்கள்.

பாலில் ஊற வைத்த பேரிச்சை ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் அடர்த்தியான உணவாக செயல்பட்டு உங்களின் ஆற்றல் அளவை அதிகரிக்கும். பேரிட்சையை பாலில் மட்டும் ஊற வைப்பது ஏன்? பேரிட்சம் பழத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

பாலில் கால்சியம் சத்து நிரம்பியுள்ளது. இது நமது உடலுக்கு தேவையான ஆற்றலையும், பலத்தையும் வழங்கும்.தினமும் காலையில் உணவுக்கு முன் வெறும் வயிற்றில் இந்த பேரிட்சை மற்றும் பால் கலந்த இந்த பானத்தைக் குடிக்கவும்.

admin

Recent Posts

முத்து சொன்ன வார்த்தை, அதிர்ச்சியில் விஜயா ரோகிணி..வெளியான சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ.!!

ராஜா ராணி இருவரும் விஜயாவின் வீட்டுக்கு வந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…

6 hours ago

OG : 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

OG படத்தின் 3 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன்…

6 hours ago

கரூர் துயர சம்பவம்.. இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்.!!

நெஞ்சை பதற வைக்கும் கரூர் சம்பவம் குறித்து பிரபலங்கள் பதிவு வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும்…

6 hours ago

துரியன் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

துரியன் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்காக ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

24 hours ago

விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணைவீர்களா.? சாந்தனு ஓபன் டாக்.!!

80களில் நாயகன் இயக்குனர் என பன்முகத்திறமையோடு தமிழ் சினிமாவை கலக்கியவர் பாக்யராஜ் இவரது மகன் சாந்தனு பாக்யராஜ்.இவரது நடிப்பில் ப்ளூ…

1 day ago

OG: 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். இவர் நடிகர் மட்டுமல்லாமல் ஆந்திர துணை முதலமைச்சர் ஆகவும்…

1 day ago