முள்ளங்கி இலையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
அன்றாடம் உணவுக்கு சமைக்கப்படும் காய்கறிகளில் ஒன்று முள்ளங்கி. ஆனால் முள்ளங்கியை சமைத்து அதன் இலைகளை பலரும் தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால் அதில் இருக்கும் ஆரோக்கியம் குறித்து நீங்கள் அறிந்துள்ளீர்களா இது மூல நோய்க்கு மிகவும் நன்மையை கொடுக்கிறது.
மேலும் சிறுநீரக கற்கள் பிரச்சனையில் அவதிப்படுபவர்களுக்கு இந்த இலை மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இது மட்டும் இல்லாமல் இதில் இருக்கும் வைட்டமின் ஏ முகத்தில் வரும் பருக்கள் பிரச்சனையில் இருந்து வெளிப்படவும் உதவுகிறது. ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் இந்த இலையை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தை உருவாக்க முடியும்.
நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பது மட்டுமில்லாமல் செரிமானத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே தூக்கி எரியும் முள்ளங்கி இலையில் இருக்கும் நன்மைகளை அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

