வெந்தய டீ யில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டு அதனை குறைக்க பல்வேறு டயட்ட்களும் உடற்பயிற்சிகளும் செய்து வருகின்றன. அந்த வகையில் உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான முறையான வெந்தய டீ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
முதலில் வெந்தய விதைகளை ஒரு ஸ்பூன் எடுத்து நன்றாக அரைத்து அதனை பொடியாக்கி கொதிக்கும் நீரில் சேர்த்து தேவைக்காக சிறிதளவு தேன் சேர்த்து குடிக்கலாம். அப்படி குடிக்கும்போது அது உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் இதில் நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் செரிமான பிரச்சனைகளான மலச்சிக்கல், அஜீரணம் பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது.
எனவே ஆரோக்கியம் தரும் வெந்தய டீ குடித்து கொலஸ்ட்ராலை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

