பசலைக் கீரை சாப்பிட்டால் நமக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று பார்க்கலாம்.
கீரையில் குளோரின், இரும்பு, புரதம், சோடியம், வைட்டமின் ஏ பி சி கே.. போன்ற தாதுக்கள் அதிகமாக இருக்கிறது. மேலும் கீரைகள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவது மட்டுமில்லாமல் ஹீமோகுளோபினை அதிகரிக்கிறது.
கீரையில் இருக்கும் நார்ச்சத்து உடலுக்கு சிறந்தது. இது செரிமானத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. நார்ச்சத்து குறைபாடு உடையவர்கள் பசலை கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் முழுவதுமாக சரியாவது மட்டும் இல்லாமல் உடல் எடையையும் குறைக்க உதவும்.
ரத்த அழுத்தத்தை குறைக்கவும், மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. பசலைக்கீரையில் போதுமான அளவு ஆன்ட்டி ஆக்சிடென்ட் இருப்பதால் உடலில் இருக்கும் நோய்களிலிருந்து விடுபட்டு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
பசலைக் கீரையில் அதிக அளவு இருக்கும் கால்சியம் எலும்புகளை வலுப்படுத்தி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

