கற்பூரவள்ளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
ஆரோக்கியம் தரும் மூலிகை இலைகளில் முக்கியமான ஒன்றாக இருப்பது கற்பூரவள்ளி. சளி, இருமல் பிரச்சனைக்கு இது மிகவும் பயன்படுகிறது. ஆனால் இது மட்டும் இல்லாமல் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கற்பூரவள்ளி கொடுக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
இதில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் சுவாச பிரச்சனையில் இருந்து விடுபட உதவுவது மட்டுமல்லாமல் காயங்களை ஆற்றவும் உதவுகிறது.
கற்பூரவள்ளி இலையை ரசம் மற்றும் பஜ்ஜி செய்தும் சாப்பிடலாம். குறிப்பாக தேநீர் வைத்து குடிக்கும் போது சளி பிரச்சனையில் இருந்து விடுபட உதவும்.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த கற்பூரவள்ளி இலையை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.