நுங்கு சாப்பிட்டால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
கோடை காலங்களில் அதிகம் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று நுங்கு. இது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது முக்கிய பங்கு வகிக்கிறது. நீர்ச்சத்து நிறைந்த பழங்களில் முக்கியமான ஒன்றாக இருப்பதால் இது உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
இது மட்டும் இல்லாமல் உடல் பருமனால் அவதிப்படுபவர்களுக்கு உடல் எடையை குறைக்க நுங்கு சாப்பிடலாம். மேலும் மலச்சிக்கல் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்கவும் உதவுகிறது.
குறிப்பாக உடலில் ஏற்படும் சூட்டு கொப்பளங்களின் மீது நுங்கு நீரை தடவி வந்தால் அரிப்பு குறைந்து உடல் சூட்டை தணிக்கும். இதில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருப்பதால் இது உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது.
எனவே உடலுக்கு ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை நாம் சாப்பிடும் போது அது நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கும் என்பதை அறிந்து இது போன்ற உணவுகளை உணவில் சேர்த்து நோயில்லாமல் வாழலாம்.