நாவல் பழம் சாப்பிடுவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
பொதுவாக நாவல் பழம் கோடை காலத்தில் அதிகமாக இருக்கும். இந்தப் பழம் சாப்பிட இனிப்பாக இருப்பது மட்டுமில்லாமல் இதில் பல நன்மைகளும் இருக்கிறது. குறிப்பாக ஆண்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் செரிமானம் சரி செய்து சருமத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
வைட்டமின் பி நாவல் பழத்தில் அதிகம் உள்ளது. 100 கிராம் நாவல் பழத்தில் 60 கலோரிகள் உள்ளது.
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நார்ச்சத்து நிறைந்த நாவல் பழத்தை சாப்பிடுவதன் மூலம் உடல் எடை குறையும்.
இதுமட்டுமில்லாமல் ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்களுக்கு நாவல்பழம் மருந்தாக இருக்கும். பொதுவாக ரத்த அழுத்தம் உள்ள ஆண்கள் இந்த பழத்தை கட்டாயம் உட்கொள்ள வேண்டும்.
இதனைத் தொடர்ந்து நம் தோலில் அல்லது முகத்தில் ஏற்படும் தழும்பு பருக்கள் போன்றவை நீக்க நாவல் பழம் உதவுகிறது. நாவல் பழத்தில் வைட்டமின் சி இருக்கிறது. இது தோல் மற்றும் முகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விலக உதவும்.
நாவல் பழத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் தசைப்பிடிப்பு வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகளை தடுக்க பெருமளவில் உதவுகிறது.