காளான் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களில் முக்கியமான ஒன்றாக இருப்பது காளான். இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இது மட்டும் இல்லாமல் இதில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை வராமல் பாதுகாக்கவும் கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவுகிறது.
மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு ரதத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது மட்டுமில்லாமல் உடல் எடையை குறைக்கவும் காளான் உதவுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியம் நிறைந்த காளான் உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.