Tamilstar
Health

அடிக்கடி கிவி பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு உண்டாகும் நன்மைகள்!

கிவி பழம் நோய் எதிர்ப்பு சக்தியை தரும் திறன் கொண்டது. எத்தகைய ஒரு நோயையும் எதிர்த்து நின்று, உடல்நலனை பாதுகாப்பதில் உடலின் ரத்தத்தில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி வலிமையாக இருக்க வேண்டியது அவசியம்.

கிவி பழத்தில் வைட்டமின் ‘ஈ’ சக்தி நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும்.

கிவி பழங்களை பழமாகவோ அல்லது சாறு பிழிந்து அருந்தி வந்தால் உடலின் ரத்தத்தில் இருக்கும் செல்களை புத்துணர்ச்சி பெற செய்து, தோளில் பளபளப்பு தன்மை கொடுத்து, சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதோடு, நீரிழிவு நோயாளிகளின், சிறுநீரில் அதிகளவு சர்க்கரை சத்துகள் வெளியேறாமல் கிவி பழம் தடுக்கிறது.

கிவி பழம் அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு கல்லீரலில் தேங்கியிருக்கும் நச்சுகள் நீங்க பெற்று கல்லீரல் பலம் பெறும். கல்லீரலில் ஏற்பட்டிருக்கும் புண்களையும் ஆற்றும்.

கிவி பழங்களில் பொட்டாசியம் சத்தும் அதிகம் உள்ளது. இந்த பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் நரம்புகளில் இறுக்கம் ஏற்படுவது தடுக்கப்படும். நரம்புகளில் ரத்தம் கட்டி கொள்ளாமல் செய்கிற சக்தி கிவி பழத்திற்கு உண்டு.