கோடை காலத்தில் தேங்காய் சாப்பிடுவது உடலுக்கு நன்மையை ஏற்படுத்துகிறது.
கோடை காலத்தில் சாப்பிடக்கூடிய முக்கியமான பொருட்களில் ஒன்று தேங்காய். இது உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கிறது. செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபடவும் எலும்புகளுக்கு வலுவையும் கொடுக்கிறது.
இது மட்டும் இல்லாமல் இதய நோய் பிரச்சனை இருப்பவர்களுக்கு நல்லது. இதை கோடை காலத்தில் சாப்பிட்டால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கொடுக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.
தேங்காயில் நார்ச்சத்து இருப்பதால் அது உடலை வலுவாக வைத்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது
இது மட்டும் இல்லாமல் வயிற்றில் ஏற்படும் எரிச்சலை நீக்கி குளிர்ச்சியை கொடுக்கிறது. கோடை காலத்தில் வரும் அனல் காற்றில் இருந்து நம் உடலை பாதுகாத்துக் கொள்ள தேங்காய் சாப்பிட்டால் நல்லது.