உணவிற்குப் பிறகு வாழைப்பழம் சாப்பிடுவதில் ஏராளமான நன்மைகள் இருக்கிறது.
பொதுவாகவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அதிகமாக வாழைப்பழம் சாப்பிடுவார்கள். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
வாழைப்பழத்தில் எக்கச்சக்கமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருக்கிறது. இது உடலுக்கு ஆற்றலை கொடுக்கிறது.
ஊட்டச்சத்துக்கள் மட்டுமில்லாமல் இதில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்ட்கள் உள்ளது. இது பல்வேறு நோய் உருவாவதில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும் உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்களுக்கு வாழைப்பழம் மருந்தாக இருக்கிறது.
மேலும் பொட்டாசியம் அதிகமாக இருப்பது சிறுநீரகத்திற்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். சிறுநீரகப் பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப்பழம் சாப்பிட்டால் நோயிலிருந்து விடுபடலாம்.