காலையில் எழுந்தவுடன் நாம் வெறும் வயிற்றில் தண்ணீரை குடிக்கும் போது நம் உடலுக்கும் மனதிற்கும் பெரும் உதவியாக இருக்கும்.
காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடிக்கும் போது அந்த நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருப்பதை உணரலாம்.
மேலும் செரிமான மண்டல பிரச்சனைகளை தீர்த்து வலுவடைந்து வயிற்றுப் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.
மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட நாம் வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால் வாயு உருவாவதை தடுக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கும்.
உடல் பருமன் பிரச்சனைக்கு வெந்நீர் சிறந்தது.
அதில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் உடல் எடை குறைவதை உணரலாம். அதுமட்டுமின்றி மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தை குறைத்து ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.