Tamilstar
Health

கரும்பு ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

Benefits of drinking sugarcane juice

கரும்பு ஜூஸ் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

கோடைகாலத்தில் அனைவரும் விரும்பி குடிக்கும் ஜூஸ்களில் ஒன்று கரும்பு ஜூஸ். இது நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது.

மேலும் புற்றுநோய் அபாயத்திலிருந்து பாதுகாக்கவும் புற்றுநோய் செல்களை வளர விடாமலும் பாதுகாக்க கரும்பு ஜூஸ் பயன்படுகிறது.

சிறுநீரக கல் பிரச்சினை இருப்பவர்கள் கரும்பு ஜூஸ் குடித்து வந்தால் அதில் இருக்கும் அமிலத்தன்மை சிறுநீரக கற்களை கரைத்து விடும்.

குறிப்பாக சிறுநீர் தொற்று பிரச்சனைகளில் இருந்தும் உடலில் ஹீமோகுளோபின் குறைபாடல் அவதிப்படுபவர்களுக்கும் கரும்புச்சாறு உதவுகிறது. மேலும் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

எனவே ஆரோக்கியம் தரும் கரும்பு ஜூசை குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.