கொத்தமல்லி எண்ணெயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
அன்றாடம் சமைக்கும் உணவுகளில் சுவையை கூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் பொருள்களில் ஒன்று கொத்தமல்லி. இது உணவிற்கு மட்டும் சுவையை கூட்டுவது மட்டுமில்லாமல் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் கொத்தமல்லி எண்ணெயில் இருக்கும் நன்மைகள் குறித்து நீங்கள் தெரிந்து கொண்டதுண்டா அதனைக் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
கொத்தமல்லி எண்ணெயில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் புற்றுநோயை எதிர்த்து போராட உதவுகிறது. இது மட்டும் இல்லாமல் ரத்த குளுக்கோஸ் அளவை மேம்படுத்த உதவுகிறது.
கொத்தமல்லி விதையிலிருந்து நேராவி வடித்தல் பயன்படுத்தி பிரித்து எடுத்தால் கொத்தமல்லி எண்ணெய் கிடைக்கும். இந்த எண்ணெயை பயன்படுத்தும் போது கண்ணில் பட்டால் மருத்துவரை அணுகுவது சிறந்தது ஏனெனில் இதில் காரத்தன்மை அதிகம் இருக்கும்.