தேங்காய் உள்ள மருத்துவ குணம் அல்சைமர் நோய்க்கு மருந்தாக உதவுகிறது.
பொதுவாகவே தேங்காயில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. இதன் காரணமாகவே பலரும் தேங்காய் எண்ணெயில் சமைக்கின்றன. நாம் தினமும் வெறும் வயிற்றில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் குடித்தால் அல்சைமர் பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.
மேலும் இது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைத்து இதயத்திற்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. தேங்காய் ஒரு ஆன்டிபயாட்டிக் என்று அழைக்கலாம். இது ஒவ்வாமை மற்றும் அலர்ஜி பிரச்சனையிலிருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.
தேங்காய் அதிகமாக நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடுவது மட்டுமில்லாமல் வயிற்றில் இருக்கும் பூச்சிகளை வெளியேற்ற தினமும் இரவில் ஒரு ஸ்பூன் தேங்காய் சாப்பிட்டால் போதும்.
தேங்காய் இருக்கும் லாரிக் மற்றும் காப்ரிக் அமிலம் வைரஸ் மற்றும் பாக்டீரியல் போன்ற நுன்கிருமிகளை எதிர்த்து போராடும்.
இதுபோன்ற பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த தேங்காயை உணவில் சேர்த்து உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம்.