கருணைக்கிழங்கில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
நாம் அன்றாடம் சமைக்கும் காய்கறிகளில் ஒன்று கருணைக்கிழங்கு. இந்தக் கருணைக்கிழங்கில் இருக்கும் நன்மைகள் பற்றி நீங்கள் அறிவீர்களா. இதில் நார்ச்சத்து வைட்டமின் சி மற்றும் பி பொட்டாசியம் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
கருணைக்கிழங்கு சமைக்கும் முன் அரிசி கழுவிய நீரில் வேகவைத்து சமைத்தால் காரல் மற்றும் நமைச்சல் வராமல் இருக்கும்.
ஜீரண மண்டலத்தை வலுவாக்கி உடல் சூட்டில் இருந்து பாதுகாக்கிறது. கருணைக்கிழங்கு மலச்சிக்கல் பிரச்சனையை நீக்குவது மட்டுமில்லாமல் மூல நோய்க்கும் மருந்தாக இருக்கிறது.
மேலும் குணமாக்கும் தன்மையையும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை நீக்கவும் கருணைக்கிழங்கு உதவுகிறது.

