கருப்பு அரிசியில் இருக்கும் நன்மைகள் குறித்து நாம் பார்க்கலாம்.
கருப்பு அரிசி சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. இது எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய ஒன்று. குறிப்பாக கண்களுக்கு மிகவும் பாதுகாப்பானதாக கருப்பு அரிசி இருக்கிறது.
இதில் நார்ச்சத்து புரதம் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து செரிமான மண்டலத்தையும் சரியாக வேலை செய்யவும் வைக்கிறது.
மேலும் மாரடைப்பு வருவதையும் இதய நோய் பிரச்சினையில் இருந்தும் பாதுகாக்க உதவுகிறது. குறிப்பாக புற்றுநோய் பிரச்சினையில் இருந்தும் பாதுகாக்க இந்த அரிசி மிகவும் பயன்படுகிறது.
எனவே உடல் ஆரோக்கியம் நிறைந்த கருப்பு அரிசியை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.