பூசணி விதையில் பலவிதமான சத்துக்கள் இருக்கிறது.
பூசணியில் அதிகமான சத்துக்கள் நிறைந்தது என அனைவருக்கும் தெரியும். பூசணியில் புரதம் இரும்பு கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது. இது புற்றுநோய் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
பூசணிக்காய் மட்டுமில்லாமல் பூசணி விதையிலும் எக்கச்சக்க நன்மைகள் இருக்கிறது. பூசணி விதையில் நார்ச்சத்து செலினியம் பொட்டாசியம் பாஸ்பரஸ் மெக்னீசியம் ஜிங்க் போன்ற ஊட்டச்சத்துக்கள் புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
நீரிழிவு நோய் பிரச்சனை இருப்பவர்கள் பூசணி விதை சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். பூசணி விதையில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் கெட்ட கொழுப்பை குறைத்து விடும்.
மேலும் பூசணி விதை ஒரு நோய் தீர்க்கும் மருந்தாகவே இருக்கிறது. குறிப்பாக ஆண்கள் பூசணி விதைகளை சாப்பிடுவது சிறந்தது.