தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தோடு ரிலீஸான கே ஜி எஃப் 2 படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதால் படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பீஸ்ட் படத்தை பார்க்க விரும்புவதை காட்டிலும் கேஜிஎஃப் படத்தை பார்க்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பீஸ்ட் திரைப்படம் தமிழகத்தில் நான்கு நாளில் 70 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது.
இதற்கு முன்னதாக அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் 4 நாளில் 80 கோடியை தாண்டி வசூல் செய்திருந்தது. இதனால் வலிமை படத்தின் சாதனையை முறியடிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது பீஸ்ட் திரைப்படம். இது அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்தாலும் விஜய் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
