Beast Vs KGF 2 Collection Report Update
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பீஸ்ட் என்ற திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது.
இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் உலகம் முழுவதும் வசூல் வேட்டை ஆடி வருகிறது. முதல் நாளில் 80 கோடி வசூலை தாண்டிய இத்திரைப்படம் இரண்டாவது நாளில் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது.
சென்னையில் மட்டும் இரண்டாவது நாளில் ரூ 1.61 கோடி வசூல் செய்துள்ளது. இதே தினத்தில் வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் சென்னையில் அறுபத்தி ஏழு லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது. தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் இந்தப் படங்களின் வசூல் கிடுகிடுவென அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளாவிய வசூலைப் பொறுத்தவரை பீஸ்ட் திரைப்படத்தை காட்டிலும் கேஜிஎப் 2 அதிகமான வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது. இந்தியில் கேஜிஎப் 2 திரைப்படம் 54 கோடி வசூல் செய்ய பீஸ்ட் திரைப்படம் 54 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது.
கேரளாவில் கேஜிஎப் 2 திரைப்படம் ரூபாய் 7.1 கோடி வசூல் செய்ய பீஸ்ட் திரைப்படம் ரூபாய் 6.6 கோடி வசூல் செய்துள்ளது. அமெரிக்காவில் 14ஆம் தேதி கேஜிஎப் 2 திரைப்படம் 32,000 டாலர் வசூல் செய்ய பீஸ்ட் திரைப்படம் 55,000 டாலர் வசூல் செய்துள்ளது.
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
காந்தாரா 2 படத்தின் 14 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
முத்து உண்மையை கண்டுபிடிக்க,மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
தாய்ப்பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக…