Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பீஸ்ட் படத்தின் ட்ரைலர் காப்பியா? கலாய்க்கும் நெட்டிசன்கள்

Beast Trailer Trolls

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாக்கிய படம் ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. ட்ரைலர் ரசிகர்களை பெரும் அளவில் கொண்டாட வைத்தது. ஆனால் படத்தின் கதை தளத்தைப் பார்க்கையில் இது கூர்கா படத்தோடு ஒன்றி போவதாக கூறி வருகிறது.

அதாவது ஒரு மாலுக்குள் தீவிரவாதிகள் புகுந்து விட அவர்களை எப்படி விரட்டியடித்து மக்களை காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதையாக அமைந்துள்ளது. இதே கதைதான் யோகி பாபு நடிப்பில் கூர்க்கா திரைப்படமும் வெளியானது.

இதனால் நெட்டிசன்கள் கூர்க்கா 2 என இந்த படத்தை கலாய்த்து வருகின்றனர்.

Beast  Trailer Trolls
Beast Trailer Trolls