தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க அபர்ணா தாஸ், செல்வராகவன், கிங்ஸ்லி என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது படத்தின் டீசர் எல்லாம் வெளியாகாது நேரடியாக டிரைலரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதுவும் தெலுங்கு வருட பிறப்பு ஸ்பெஷலாக ஏப்ரல் 2ஆம் தேதி இந்த டிரைலர் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
