தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து ஏப்ரல் 13ஆம் தேதி பீஸ்ட் திரைப்படம் ரிலீஸாக உள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் மட்டும் இதுவரை எவ்வளவு டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஆமாம் இதுவரை 25 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன, படம் ரிலீசுக்கு இன்றும் நாளையும் இருப்பதால் அதற்குள் 30 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
