Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பீஸ்ட் படத்தின் தோல்விக்கு இதுதான் காரணமா? நெல்சன் விளக்கம்

beast-movie-thalapathy-vijay-latest-news update

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார். இந்த படத்தை தொடர்ந்து டாக்டர் படத்தையும் இயக்கி வெற்றிகண்ட இவர் அடுத்ததாக விஜய் வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பயங்கர பில்டப் உடன் வெளியான இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் தோல்வியை தழுவியது. இதை அடுத்து நெல்சன் ரஜினி கூட்டணியில் வெளியான ஜெயிலர் திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் நெல்சன் youtube ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பீஸ்ட் படத்திலிருந்து எதிர்மறை விமர்சனங்களுக்கு என்ன காரணம் என பேசியுள்ளார்.

பீஸ்ட் படத்திற்கு இன்னும் கூடுதலாக ஆறு ஏழு மாதங்கள் உழைப்பை போட்டிருந்தால் அதன் ரிசல்ட் வேற மாதிரி வந்திருக்கும். கொரோனா எங்களுக்கு நிறைய சவாலான சூழ்நிலைகளை ஏற்படுத்தியது. எங்களால் திட்டமிட்டபடி செயல்பட முடியவில்லை, வி எஃப் எக்ஸ் பணிகளையும் முழுமையாக செய்ய முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

beast-movie-thalapathy-vijay-latest-news update
beast-movie-thalapathy-vijay-latest-news update