தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் மட்டுமே வெளியாகியிருந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவிற்காக ஒட்டு மொத்த ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தனர். குறிப்பாக விஜய் சொல்லும் குட்டிக்கதைக்காக அனைவரும் எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் ஆடியோ லான்ச் நடைபெறவில்லை என தகவல் வெளியானது.
அதற்கு பதிலாக தளபதி விஜய் உட்பட படக்குழுவினர் அனைவரும் ஒன்றாக இணைந்து சன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் இந்த ஸ்பெஷல் நிகழ்ச்சி ஏப்ரல் 10-ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி விஜய் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிபரப்பான சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங் நிச்சயம் உச்சத்தை தொடும் என நம்பலாம்.
