Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பீஸ்ட் படம் குறித்த அடுத்தடுத்து வெளியாகும் அறிவிப்பு.. படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Beast Movie Release Rights in Tamilnadu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ளது.

அனிருத் இசையமைக்க நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்ததைத் தொடர்ந்து சென்சார் பணிகளும் நிறைவடைந்து நேற்று படத்திற்கு யுஏ சான்றிதழ் எனவும் படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகும் எனவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நேற்று இரவு இந்த படத்தின் தமிழக உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேப்போல் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை தில் ராஜு மற்றும் அவருடைய சகோதரர் ஆகியோர் இணைந்து கைப்பற்றி உள்ளனர் என்பதும் அறிவிக்கப்பட்டுள்ளது. தளபதி விஜய்யின் அடுத்த படமான வம்சி இயக்கும் படத்தை தில் ராஜு அவர்கள் தான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.