தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது தொடர்ந்து தற்போது பீஸ்ட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க அபர்ணா தாஸ் விஜய்யின் தங்கையாக நடித்துள்ளார்.
மேலும் படத்தில் செல்வராகவன் வில்லனாக நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் இன்னும் ஏராளமான திரையுலக பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே அரபிக் குத்து என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்த நிலையில் தற்போது புதிய போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி பலரையும் கவர்ந்து வருகிறது. ஆனால் இது உண்மையில் அதிகாரப்பூர்வ போஸ்டர் இல்லை. ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர் தான். இருக்கு இந்த போஸ்ட்டை பார்க்கும்போது அதிகாரப்பூர்வ போஸ்டர் போலவே செம மிரட்டலாக இருப்பதால் ரசிகர்கள் பலரையும் கவர்ந்து வருகிறது.
just got confused, fan made or official? pic.twitter.com/L1uHZvq2aE
— LetsOTT Global (@LetsOTT) March 15, 2022

