தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
அனிருத் இசையிலும், சிவகார்த்திகேயன் வரிகளிலும், உருவான இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட பாடலாக சாதனை படைத்துள்ளது.
இப்படியான நிலையில் இந்தப் பாடல் காப்பி என ரசிகர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
