தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க அனிருத் இசையமைத்து உள்ளார்.
படத்தில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன் என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் சிங்கிள் ட்ராக் வீடியோ வரும் 14ஆம் தேதி வெளியாகும் என ப்ரோமோ வீடியோவோடு அறிவிப்பு வெளியானது.
தற்போது இந்த ப்ரோமோ வீடியோ யூடியூபில் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. ப்ரோமோ வீடியோவுக்கே இப்படினா பாடல் வெளியானால் எப்படி இருக்கும்னு பார்த்துக்கோங்க என விஜய் ரசிகர்கள் கமெண்ட் அடித்து கொண்டாடி வருகின்றனர்.
Vera maari response for #BeastFirstSingle promo ????
10M+ views and counting ????▶ https://t.co/dSqP98cWt1@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @Siva_Kartikeyan @hegdepooja @manojdft @Nirmalcuts #ArabicKuthuOnFeb14 #ArabicKuthu #Beast pic.twitter.com/4d1S3bUisO
— Sun Pictures (@sunpictures) February 9, 2022