நெல்சன் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் ‘பீஸ்ட்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பீஸ்ட் படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி பீஸ்ட் படத்தின் முதல் பாடலை வருகிற தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இசையமைப்பாளர் அனிருத் ஏற்கனவே இந்த படத்திற்கான அனைத்து பாடல்களையும் கம்போஸ் செய்து முடித்துவிட்டதாகவும், தீபாவளி அன்று விஜய்யின் அறிமுக பாடலை வெளியிட வாய்ப்பிருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.

